"அப்போ சரி. ஞாயிற்றுக்கிழமை வந்துடு. தேவையானது எல்லாம் முதலில் ரெடி செஞ்சி வைச்சுகிட்டால் ஒரு மணி நேரத்தில் தயார்"
என் அக்கா / தங்கை சாந்தா செல்போனில் கொஞ்சிக் கொண்டிருந்தாள். எனக்கு அவள் அக்காவா தங்கையா என்ற குழப்பம் எப்போதுமே உண்டு. ஏனென்றால் நாங்கள் ரெட்டை வாழைப்பழம் போல ஆனால் ஒட்டாமல் எண்ணை தடவிப் பிறந்தவர்கள்.
கர்ப்பப்பையிலேயே என் தொப்புள் கொடியை என் கழுத்தைச் சுற்றி மாட்டி இழுத்து என்னைக் கொல்லப் பார்த்த ராட்சசி. எங்க அம்மா அப்பாவுக்கு நாங்க ரெண்டே கொயந்தைங்கதான்.