என் பெயர் சுமித்ரா. தற்போது என் வயது 36 முடிந்துவிட்டது. நான் சென்னையில் செல்வச்செழிப்பான ப்ராமணக்குடும்பத்தில் ஒற்றைப் பெண்ணாய் பிறந்து வளர்ந்து படித்து பட்டம் பெற்றவள். எனக்கு 21 வயதில் திருமணம் நடந்தது. திருமணம் ஆனபின் கணவருடன் டில்லிக்குச் சென்று விட்டேன்.
இச்சம்பவம் நடந்து சுமார் 13 ஆண்டுகள் கழிந்தாலும் அதன் நினைவுகள் என்றும் பசுமையாக என் நெஞ்சில் நிறைந்துவிட்ட காரணத்தால் இங்கே உங்களனைவருக்கும் காணிக்கையாக்க விழைகிறேன். இந்த நிகழ்வை ஏற்கனவே ஆங்கில இணைத்தளம் ஒன்றில் பதிந்துவிட்டேன். எனினும் தமிழில் பதிக்க விருப்பப்பட்டதால் உங்களுக்காக இங்கே:
ஒரு பெண்ணுடனான எனது அந்தரங்க உறவு பற்றிய கதை இது. அப்போது நான் மத்திய அரசின் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் மனிதவளத்துறை மேனேஜர்-ஆக வேலைபார்த்து வந்தேன். 1997 கோடை காலத்தில் இது எனக்கு அறிமுகமாகியது. அப்போது எனக்குத் திருமணம் ஆகி சுமார் ஒரு வருடம் இருக்கும். என் அன்பான கணவருடன் அனைத்து விதத்திலும் பரிபூரண ஆனந்தத்துடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தேன்.