"என்னம்மா பண்றது.ஒரு வருஷம் தான் என்னோட மனவியா இருந்தாலும், உன் அண்ணியை என்னாலே மறக்க முடியலை. அப்பா வேறே இறந்த துக்கம், என்னாலே தாங்க முடியலை.எனக்குன்னு யார் இருக்கா?"
"என்னண்ணா அப்படி சொல்லிட்டே. ஏன் நாங்க இல்லே?அம்மா இல்லே? எங்களுக்காகவாது நீ வாழ்ந்தாகணும்'ணா."
சிறிது நேரம், ஏதோ நினைவில், என் அண்ணனின் கண்களை உற்றுப் பார்த்த நான், ஒரு முடிவுக்கு வந்தவளாக "இனிமே குடிக்கரதில்லே'ன்னு சத்தியம் பண்ணி கொடுன்னா?"
"அது எப்படிம்மா முடியும்?பழகிப் போச்சே."
"குடியை விட்டுடறேன்னு சத்தியம் பண்ணு. நான் உனக்கு ஒன்னு தர்றேன்."
"சரிம்மா...உனக்காகவும்,அம்மாவுக்காகவும் சத்தியமா, இனிமே குடிக்க மாட்டேன்." என்று என் தலையில் கை வைத்து, என் அண்ணன் சத்தியம் செய்ய,... குனிந்திருந்த நான், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, அவர் முகத்தருகே இன்னும் நெருங்கி, "இப்போதான்,நல்ல அண்ணா,என் செல்ல அண்ணா"ன்னு சொல்லி,