இது நான் துபாயில் பணியாற்றும் போது நடந்தது.
ஒருமுறை என் நன்பணின் அழைப்பை எற்று அவனைக் காண அவனது பிளாட்டிற்கு சென்றிருந்தேன்.அது ஒரு பின்னிரவு நேரம். கிட்டத்தட்ட மணி 10:30.
இரண்டு மூன்று முறை அழைப்பு மணியை அழுத்திய பிறகு கதவைத் திறந்தது ஒரு தங்க மயில்.சிலரை மட்டும் பார்த்தவுடனே தூக்கும் பாருங்க அந்த ரகம்.
ம்... யாரு வேணும் என்று அதட்டல் குரலில் வேண்டா வெறுப்பாக கேட்டது குயில். ஏற்கனவெ அவள் அழகில் மிரண்டு போயிருந்த நான் அந்த அதட்டலில் மேலும் மிரண்டு, பிரபுவோட நண்பன் நான். என்னை வரச் சொல்லியிருந்தான் என்றேன்.
ம்... உள்ள வந்து உட்காருங்க. அவரும் எங்க மாமாவும் அவங்களோட மேனேஜர் வீட்டுக்கு போயிருக்காங்க. இப்ப வந்துருவாங்க.