பார்த்ததுமே "சுண்டக்கா.. நல்லா இருக்கியாடா?" என்றாள் சித்தி.
"சித்தி கேக்குறால்ல, எப்படி இருக்கேன்னு சொல்லுடா" என்றாள் அருகில் இருந்த அம்மா.
"நல்லா இருக்கேன் சித்தி" நான் வேண்டா வெறுப்பாய் சொன்னேன்.
"சரி.சரி. உள்ள வா. இப்படி இரு. இளநீ வெட்டி தாரேன். குடிக்கிறியா?"
நான் தலையாட்ட சித்தி உள்ளறைக்குள் நுழைந்து இளநீர் கொண்டு வர சென்று விட்டாள். எனக்கு சித்தி மீது எரிச்சலாக வந்தது. இத்தனை வருடம் ஆகிவிட்டது. இன்னும் அவள் அந்த பெயரை மறக்கவில்லையே. புது ஊருக்கு வந்த என்னுடைய உற்சாகம் சுத்தமாக வடிந்து போனது.