அந்த நடு இரவில் அந்த சாலையில் யாரும் இல்லை. நான் மட்டும் தனியாக நடந்து போய்க் கொண்டு இருந்தேன். கரி அப்பி விட்டது போல இருட்டு. ஒரே நிசப்தம். எங்கோ ஒரு நாய் ஓலமிடுவது மட்டும் கேட்டது. நண்பனுடன் செகண்ட் ஷோ சினிமாவுக்கு சென்றேன். அவன் ரூமுக்கு போய் விட்டான். நான் கடைசி பஸ்ஸை பிடித்து என் ரூமுக்கு வந்தேன். பஸ் பாதி வழியில் மக்கர் செய்து விட, நடக்கும்படியாயிற்று. ஆட்டோ வேறு கிடைக்கவில்லை. இன்னும் இரண்டு கிலோ மீட்டர்தான். பற்களை கடித்துக் கொண்டு வேகமாக நடந்தேன்.
சாந்தி நகர் வளைவில் திரும்பியபோது, இருளை கிழித்துக் கொண்டு, ஒளிக்கற்றைகளை தெளித்தவாறு ஒரு வாகனம் வருவது தெரிந்தது. வேகமாய் வந்த வாகனம் கொஞ்சம் கொஞ்சமாய் வேகம் குறைந்து என் முன்னாள் ப்ரேக்கிட்டு நின்றது. அப்போதுதான் கவனித்தேன் அது போலீஸ் ஜீப். உள்ளே இருந்து ஒரு பெண் எட்டிப் பார்த்தாள். போலீஸ் யூனிபார்மில் இருந்தாள்.