நான் நல்ல பாண்டியன். நல்ல தேவன் என் பெயர். பாண்டியனின் சேனாதிபதியாக இருந்ததால் நல்ல பாண்டியன் என்பார்கள். 6 மாதங்களுக்கு முன் இதே போல ஒரு நாளில்தான் தோத்தா கிழவன் இறந்தார். . பொழுது சாயும் நேரம், புகார் கடற்கரையில் கடலைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். கடலின் அலைகளைப் போல என் மன அலைகளும் வேகம் கொண்டன. கண்கள் கலங்க கடலைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். காரணம் கடலிற்கும் எனக்கும் மிகுந்த நெருக்கம் உள்ளது. கரை தொட்டு மீண்டும் கடலிற்குத் திரும்பும் அலைகளோடு வாருங்கள் என் பழைய கடல் வாழ்க்கைக்குச் செல்வோம்.
