நான் மனோஜ் குமார். மனோஜ் என்று அழைப்பார்கள். நான் சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்கிறேன். கோவையில் எல் ஜி க்ரூபில் ஒரு நேர் முக தேர்வுக்கு வந்தேன். அங்கே என் அம்மாவின் தங்கை – என் சித்தியும் சித்தப்பாவும் இருக்கிறார்கள். அவர்கள் தனியாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெண் கோவையில் தன் கணவனுடன் இருக்கிறாள். நான் ஒரு வியாழகிழைமை காலை கோவை போனேன். அன்று நேர்முக தேர்வு முடிந்து விட்டது. சித்தி ரெண்டு நாள் தங்கி விட்டு போ என்று சொன்னதால், தங்கினேன். இதற்க்கு நடுவில் என் சித்தப்பாவின் நெருங்கின உறவினர் ஒருத்தர் பாலக்காட்டில் இறந்து விட்டார் என்று செய்தி வந்து அவர்கள் போய் விட்டார்கள்.
