தூக்கக்கலக்கத்தில் இருந்தவனை கடிகார அலாரம் நேரம் 6.00 மணியென அழையா விருந்தாளியாய் தட்டி எழுப்பியது. எழுந்தும் எழாமல் கைகளால் தடவி அதை நிறுத்திவிட்டு கைகளால் கட்டில் தடவினேன் ம்…என் ஆசை மனைவியை சபிதாவை தேடி. தமிழ் பண்பாடு அறிந்த மனைவி, கணவனுக்கு முன்னமே எழுந்து வீட்டு வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டாள் போல் என் தர்மபத்தினி. இரண்டு மாதங்களுக்கு முன் அவள் யாரோ நான் யாரோ. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பெண் பார்க்க சென்ற அன்றே தன் அழகால் என்னை கிறங்கடித்தவள்.
