Pages

கல்லூரியில் படித்த குழலியின் கிராமத்தில்

காலையிலேயே, வீட்டிலே நின்ன மஞ்சுவிரட்டுக்காளையைக் குளிப்பாட்டி நெற்றிப் பொட்டிட்டு கழுத்திலெ சலங்கை மணி கட்டி, கொம்பிலே ஐந்து பவுனிலே செய்த தங்கச் செயினை மாட்டி, கோவில் வீட்டுக்கு முன்பு கொண்டு வந்து நிறுத்தினான் வெள்ளயன்.

" எங்கேடா"

" பொட்டப்பட்டி கண்மாய் மஞ்சவிரட்டும், ராத்திரிக்கு முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதலும் இருக்குல்ல. அதுக்கு தான் காளையைப் பிடிச்சுக்கிட்டு போறேன்"

அப்பா குலதெய்வத்துக்கு தீப ஆராதனைக் காட்டி, காளையின் நெற்றியில் விபூதி குங்கும் வைத்து, கழுத்திலே பூ மாலையும் போட்டுவிட்டார்.

எனக்கு குழலி நினவு வந்தது. கல்லூரியில் இருந்து வந்த சமயம் ரயிலில் நடந்த நிகழ்வும் நினைவுக்கு வந்து மனக் கிளர்ச்சியை உண்டு பண்ணியது.