எங்க அப்பா அம்மாவுக்கு ரெண்டு குழந்தைகள். நானும் என் அண்ணனும். அண்ணன் என்னைவிட பத்து வயது மூத்தவர்.
எங்க அப்பா எனக்கு ரெண்டு வயதாகும்போதே இறந்துவிட்டார். எங்களை வளர்த்து ஆளாக்கியது எங்க அம்மாதான்.
அண்ணனுக்குத் திருமணம் ஆகி அண்ணி வீட்டுக்கு வந்த பிறகு குடும்பப் பொறுப்பை அம்மா அண்ணிகிட்டே ஒப்படைச்சிட்டாங்க.
அதனாலே வீட்டு நிர்வாகம் முழுக்க அண்ணி கையிலேதான்.
அண்ணி ரொம்ப நல்ல மாதிரி. வீட்டுலே இருக்கிற யார் மனமும் கோணாமல் நடந்துக்கிட்டாங்க.
அண்ணனுக்குத் திருமணம் ஆகி அம்மா சில வருஷங்கள்தான் இருந்தாங்க. உடல்நலம் சரியில்லாமல் போய் திடீர்னு இறந்துட்டாங்க.
அதனாலே அதிகம் கவலைப்பட்டது நாந்தான்.
ஏன்னா அம்மா இருக்கிறவரை நானும் அவங்க கூட இந்த வீட்டில் இருந்தேன்.
இப்போ அண்ணனோ அண்ணியோ திடீர்னு என்னை வீட்டை விட்டுப் போகச் சொல்லிவிட்டால்? என் கதி அதோகதிதான்.
நான் இன்னும் படிப்பைக் கூட முடிக்கவில்லை. ஆனால் நான் கவலைப்பட்டது அனாவசியம் என்பது கொஞ்ச நாளிலேயே தெரிஞ்சிகிட்டேன்.
மேலும்தொடர..