சுனிதா, அப்சரா, ராம் மூவரும் நன்றாக
மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டனர். தக்ஷின் மற்றும் அன்னலட்சுமி
இலிரிந்து வரவழைக்கப்பட்ட மிகவும் ருசியான உணவு அருந்தினர். அத்துடன்
மூவரும் உயர்ந்த ரக ஒயின் குடித்தனர். சுனிதாவுக்கும் ராமுக்கும் காபெர்நே என்ற ரெட் ஒயின் ரொம்பப் பிடிக்கும். அப்சராவுக்கு ஷார்டோனே என்ற வைட் ஒயின் ரொம்பப் பிடிக்கும். சிறிது நேரத்திற்குப் பிறகு மூவருக்கும் கொஞ்சம் கிறக்கம் ஏற்பட்டு, இளைப்பாறத் தொடங்கினர்.
அப்சரா, "எனக்குத் தூக்கம் வருகிறது. See you guys !" என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். சில நிமிடங்களில் அயர்ந்து தூங்கி விட்டாள்.

