Pages

வைத்தியம்

என் பெயர் நிர்மலா . வயது முப்பத்தி மூன்று . திருமணமாகி விட்டது . கணவர் அரசு வங்கியில் மேனேஜராக இருக்கிறார் . எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் . அவர்கள் என் கணவரது பெற்றோர் வீட்டில் தங்கிப் படிக்கிறார்கள் . நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வளத்துறையில் பணிபுரிந்து வந்தேன் . சமீபத்தில் என் கணவருக்கு சென்னைக்கு மாற்றலாகியது . எனவே கோயமுத்தூரில் இருந்த நாங்கள் சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு தங்கினோம் . நானும் வேலை பார்த்துக்கொண்டிருந்த அந்த பழைய நிறுவனத்திடம் இருந்து ரிசைன் பண்ணிவிட்டு வந்து விட்டேன் . சென்னையில் புரசைவாக்கத்திர்க்கு அருகில் வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு மனுப்போட்டிருந்தேன் . திருமணமானவள் . அதோடு போதிய முன் அனுபவம் இருந்ததால் நல்ல சம்பளத்திலேயே எனக்கு வேலை கிடைத்தது .