Pages

அழகுப் புயல்

விமல் பரபரப்பாக கல்லூரிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். எல்லாவற்றையும் பலமுறை சரிபார்த்துக் கொண்டான். ஒரு அரை மணிநேரம் முன்னதாகவே கிளம்பி கல்லூரியை அடைந்தான். சரி யார் இந்த விமல்... ஏன் இந்தக் கலவரம்... எதாவது exam? விமல் முதலாமாண்டு MBA படிக்கும் மாணவன். எப்போதும் மிகவும் நல்லவன் என்று பெயரெடுத்தவன். சரி.. இன்று என்ன ஸ்பெஷல்? கல்லூரி கலை விழாவில் இவனுக்கும் சில பொறுப்புகள் . இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் பல வேலைகள். விமல் கல்லூரிக்குள் நுழையவும் அவனது செல் சிணுங்கியது... ரம்யாவின் நம்பர் "